சோழர் நாட்டில்:-
திருச்சிராப்பள்ளி (திருச்சி) நோக்கி வரும் அவள 14 கிலோமீட்டர் முன்பு இரண்டு பிரிவாக பிரிகிறாள். வடக்கு பக்கம் கொள்ளிடம் என்ற பெயர் பெறுகிறாள். தென்பக்கம் தன் இயல்பான பெயராலே (காவிரி) அழைக்கப்படுகிறாள். இங்கு காவிரியின் நிலமட்டம் கொள்ளிடத்தின் நிலமட்டத்தை விட 6 அடி தாழ்வாக உள்ளது. மீண்டும் இரண்டு ஆறுகளும் சேரும் இடத்தில் காவிரியின் நிலமட்டம் கொள்ளிடத்தின் நிலமட்டத்தை விட 6 அடி உயர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு இரு ஆறுகளும் உருவாக்கும் தீவு பகுதி தான் திருவரங்கம்.
கரிகாலன் ஏன் கல்லணை கட்டினான்?
யோசியுங்கள்!
-தொடரும் ஓட்டம்-