நண்பர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்! மிக நீண்ட காலத்திற்குப் பின் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!
பல்வேறு நிகழ்வுகளால் உங்களிடம் கிட்டத்தட்ட இரண்டு வருட காலங்கள் தொடர்பு கொள்ளமுடியாத சூழ்நிலை இருந்தது. ஏற்பட்ட தடைகள் தற்போது படிகளாக மாறிவிட்டன. தொடர்பு கொள்ளாமைக்கு தயவு செய்து மன்னிக்க வேண்டுகிறேன்! இனி நாம் பல்வேறு இடங்களில் பயணிப்போம்!
நம் அடுத்த பயணம் கூட சோழர் பேரரசை தோற்றுவிக்கக் காரணமான ஒரு இடத்தை நோக்கியே! ஆனால் இது திட்டமிட்ட பயணம் அல்ல!
நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றபொழுது அவர் ஊரின் பெயர்க்காரணம் அறிய விழைந்தேன், அதன் தொடர்ச்சி முடிந்த இடம் திருப்புறம்பியம். .
உதிரம்படிந்த தோப்பு! பால்படுகை!! கொல்லாந்தோப்பு!!! பரியாரிதோப்பு!!!! சீயபாட்டன்கோயில்!!!!
அப்பப்பா, திருப்புறம்பயம் சுற்றி அமைந்துள்ள இடங்கள் பெயர்களே கட்டியம் கூறுகின்றன அங்கு நிகழ்ந்த போரைப் பற்றி!
திருப்புறம்பயம் - சொல்லும்போதே உடல் சிலிர்க்கிறது!
கிட்டத்தட்ட 1200 வருடங்களுக்கு முன் செந்நீராம் குருதி புனலாக ஓடிய இடம்!
பல்லவர்கள் பாண்டியர்களோடு சோழர்களும் பொருதிய களம்!
சிற்றரசர்களாக இருந்த சோழர்கள் தமிழகம் தாண்டி வடக்கே கங்கை வரை, தெற்கே கடல் தாண்டி ஸ்ரீவிஜயம் வரை, கிழக்கே வங்கம் வரை, மேற்கே பாகிஸ்தானின் பகுதிகளையும் அடக்கியாளும் அளவுக்கு வீறு கொண்டு எழக் காரணமாக இருந்த இடம்!
உதிரம்படிந்த தோப்பு! பால்படுகை!! கொல்லாந்தோப்பு!!! பரியாரிதோப்பு!!!! சீயபாட்டன்கோயில்!!!!
அப்பப்பா, திருப்புறம்பயம் சுற்றி அமைந்துள்ள இடங்கள் பெயர்களே கட்டியம் கூறுகின்றன அங்கு நிகழ்ந்த போரைப் பற்றி!
தனக்கு தானே வழிநடத்தும் போராட்ட குணம் சிறிதும் இன்றி சவத்தைப் போல பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இக்காலத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய இடம் இதுவாக தான் இருக்க வேண்டும்!
மற்றொரு முக்கியமான சேதி உங்களிடம் கூற வேண்டும்! பொன்னியின் செல்வன் நாவலை கல்கி அவர்கள் எழுத காரணமான சதாசிவ பண்டாரத்தையர் பிறந்த ஊர் கூட திருப்புறம்பயம் தான்.
விரைவில் முழு தகவல்களுடன் சந்திப்போம்! சிந்திப்போம்.!
- பாலா
No comments:
Post a Comment