Thursday, November 19, 2015


மழையே! நீ வாழ்க! பகுதி - 3



மலையும் மலை சார்ந்த மக்களும்,  காடும் காடு சார்ந்த மக்களும், உழவு நிலமும், உழவு சார்ந்த மக்களும், கடலும், கடல் சார்ந்த மக்களும் என வகைப்பாடு கொண்டு வாழும் நிலை எப்பொழுது கெடுகிறதோ, எங்கு இவற்றிற்கிடையேயான  கண்ணி, தொடர்பு சங்கிலி அறுக்கப்படுகிறதோ அங்கு நிர்வகிக்கும் பொறுப்பை ஐம்பூதங்கள் எடுத்துக் கொள்ளும், இனி இது தான் நிகழும்.


காடு அழித்து கழனி ஆக்கினான் தொடக்கத்தில் மனிதன்,
கழனி அழித்து நாடு ஆக்கினான் அடுத்து வந்த  மனிதன்,
காடு, கழனி, மலை, கடல் என எல்லாமே அழித்து நாடாக்கப் பார்க்கிறான் இன்றைய மனிதன்,
விளைவு, நாடு அழித்து காடு ஆக்கப் பார்க்கும் இனி ஐம்பெரும்பூதம்,

ஒவ்வொரு வினைக்கும் பதில் வினை, எல்லாமே ஒரு வட்டம்.

தொடரும் மழை...

No comments:

Post a Comment