"கண்ணோ! கருங்கயலோ! உண்ணுங்கூற்றோ! ஒளிவேலோ! உணர்கலேனாற்!"
இது பாடல் வரி!
விளக்கம்: பெண்ணே! உன் கண்கள் கருமையான நிறம் கொண்ட அங்கும் இங்கும் சுற்றி வரும் மீன்களோ! இல்லை! என் உயிரைக் கொண்டு செல்ல வந்திருக்கும் கூற்றோ! அதுவும் இல்லை என்றால் விரைவாக என் நெஞ்சில் பாயும் ஒளி பொருந்திய வேலோ!
எப்படிப்பட்ட நுண்ணுணர்வான காதல் நோயின் உச்சத்தை வெளிபடுத்தும் வரிகள்! படிக்கும்போதே படிப்பவர் மனதில் எண்ணங்கள் வர்ண ஜாலம் புரிந்து புது புது ஓவியங்கள் விளைகின்றனவே! கட்டாயம் இது ஒரு காதல் வயப்பட்ட ஒரு இளைஞன் பாடியது என்று தானே நினைக்கிறீர்கள்! நானும் அப்படித் தான் நினைத்தேன்!
ஆனால் அப்படி இல்லை! பாடியது ஒரு துறவி! நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், அந்த துறவி இன்றைய காலகட்டத்தில் உள்ள சில போலித் துறவிகள் போல ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களோடு வளைய வந்த துறவி அல்ல. உண்மையிலேயே முற்றும் துறந்தவர்! சமணத் துறவி!
சமணர்களால் இன்ப நெறி காட்டும் இலக்கியங்கள் படைக்க முடியாது என்று சவால் விடப்பட்டபோது அவர்களாலும் முடியும் என்று அவர் உருவாக்கிய காப்பியத்தில் விளைந்ததே மேலே உள்ள பாடல் வரிகள். அவர் பாடி முடித்த பிறகு "நீ! உண்மையான துறவி தானா? அதை நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டபோது பழுக்கக் காய்ச்சிய கம்பியைத் தன் இரு கைகளால் வாங்கிக் கொண்டார் என்றும் அவரது கைகளுக்கு எந்தவிதமான பாதிப்புமே நடக்கவில்லை என்றும் அதன்மூலம் அவரின் புனிதம் நிருபிக்கப்பட்டது என்றும் கூறுவர். அந்தத் துறவியின் பெயர் திருத்தக்கத்தேவர், அவர் பாடிய காப்பியம் "சீவகசிந்தாமணி".
என் கேள்வி! இது தான், ஒருவர் ஒன்றை அனுபவித்து அறியாமலே அதைப் பற்றி பாட முடியுமா? அது காதல் ஆகட்டும், வீரம் ஆகட்டும், இல்லை வேறு எந்த ஒரு நிலை கூட இருக்கலாம், ஆனால் "அனுபவிக்காமல் அறிதலோ, ஓதாமல் உணர்வதோ நடக்குமா?"

No comments:
Post a Comment